நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை மேலும் அதிகரிக்கும், என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாழ் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
