மட்டு.ஏறாவூரில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (51) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வாவியில் தனியாக தோணியில் மீன் பிடிக்க சென்ற குறித்த மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.