வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான சுற்றறிக்கை வெளியானது
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அழைப்பை மட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை உடன் அமுலுக்கு வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நடைமுறை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
