எரிபொருள் விலையை குறைக்க கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள நாடான எக்குவடோரில் உள்ள பழங்குடியின மக்களும், விவசாயிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கோடோபாக்ஸி மாகாணத்தில் உள்ள சான் ஜுவான் டி பாஸ்டோகால்லேயில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

எக்குவடோரின் முக்கிய பூர்வீக இயக்கம், ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோவின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் சுழற்சியைத் தொடங்கியுள்ளது.

எரிபொருள் விலையை குறைக்கக் கோரி பல மாகாணங்களில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.