12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் 12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.