வைத்தியரொருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வைத்தியரொருவரின் வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் வைத்தியரொருவரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.