அரச துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை
அரச துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நடைமுறை இந்த வாரம் முதல் அமுலாகும்.
எனினும், இதில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு துறைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது, எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
