மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் : போதை ஊசி ஏற்றி உயிரிழந்தாரா என சந்தேகம்

-கிளிநொச்சி நிருபர்-

உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கும் போது, குறித்த நபர் போதைவஸ்துப் பழக்கத்திற்கு அடிமையாகியவர் என அறியக் கிடைக்கும் நிலையில், அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிர் இழந்தாரா? என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

எனினும், குறித்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.