தீ வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசியப்பிட்டியில் வயோதிப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
72 வயதுடைய குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
