மருமகளை காப்பாற்ற முயன்ற தந்தையை அடித்து கொன்ற மகன்
குருவிட்ட-பொஹரபாவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மரக்கம்பினால் தாக்கி மகனொருவர் தனது தந்தையை கொலை செய்துள்ளார்.
சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் மகன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த சந்தேக நபர் தனது மனைவியைத் தாக்க முற்பட்டுள்ளார், அவ்வேளை அவரின் தந்தை குறுக்கிட்டு மருமகளை காப்பாற்றியுள்ளார்.
எனினும், மதுபோதையில் இருந்த சந்தேக நபர் தனது தந்தையை பலமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான 66 வயதுடைய குறித்த தந்தை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
