
வீடொன்று தீயில் எரிந்து முற்றாக சேதம்
-பதுளை நிருபர்-
பதுளை கைலகொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடொன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.
தீப்பிடித்த நேரத்தில் குறித்த வீட்டில் 9 பேர் இருந்துள்ளதோடு, எவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத போதிலும், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
தீப்பிடித்தமைக்கான காரணத்தை இதுவரையிலும் கண்டறியாத போதிலும், பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
