அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பைபர்
உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.
ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் காது உள்ளிட்ட முகத்தின் ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
தான் எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் வலதுபக்க கண், காது உள்ளிட்ட உறுப்புகளை இயக்க முடியவில்லை எனவும், இதனால், தான் ஏற்பாடு செய்த இசைக் கச்சேரிகளையும் ரத்து செய்துள்ளதாகவும், அந்த காணொளியில் ஜஸ்டின் பைபர் தெரிவித்துள்ளார்.