
எரிபொருள் வழங்கப்படுவது தொடர்பாக அறிந்து கொள்ளும் இணையத்தளம்
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) மற்றம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க ஓன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும். அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையதளம் : https://fuel.gov.lk/
