நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் ஏற்றிய 5 கப்பல்கள்

இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் 5 எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரும், என எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரண்டு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களும், 16 ஆம் திகதி இந்திய அரசின் கடன் திட்டத்தின் இறுதி டீசல் கப்பலும், 22 ஆம் திகதி மற்றுமொரு பெற்றோல் கப்பலும், 20 ஆம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்து இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பலும் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.