கிளிநொச்சி இளைஞன் செய்த நேர்மையான செயல்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை, புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர் தவறவிட்டுள்ள நிலையில், அதனை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு இளைஞன் தொலைபேசி உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த இளைஞனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர், கிளிநொச்சியில் உள்ள கிராம பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்து, பாடசாலையினையும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவரை நேரடியாக பார்வையிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வீதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறவிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன், அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவ்விளைஞனின் இச் செயற்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர்.
