நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை
நாட்டில் எந்தவொரு பகுதிகளிலும் பிரவேசிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டு முடிவாகும், என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் எனவும், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொருத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
