
உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை சடுதியாக உயர்வு
உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்று வியாழக்கிழமை மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராகவும், டெக்சாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122. 17 டொலராகவும் உள்ளது.
இது கடந்த 13 வாரங்களில் பதிவான உச்சபட்ட விலை அதிகரிப்பாகும்.
