
ஆங்கிலத்தில் பதிலளிக்க பயமாக இருக்கிறது என சிங்களத்தில் பதிலளித்த பசில்
நான் தற்போது சாதாரண பொது மகன், எனினும் நான் பதவி விலகிய போதிலும் எனது அரசியல் நடவடிக்கைகள் தொடரும், என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை கைளித்தார்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்,
நான் தற்போது சாதாரண பொது மகன் நான் பதவி விலகிய போதிலும் எனது அரசியல் நடவடிக்கைகள் தொடரும்.
நான் இனிமேல் அரச நிர்வாகத்தில் ஈடுபடமாட்டேன், அரசாங்க பதவிகளில் பதவி வகிக்கமாட்டேன் என தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி ( IMF) தொடர்பில் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதுஇ
நான் மீண்டும் கபுடாஸ் என்று பிழையாக ஏதாவது சொல்லி விடுவேன் என பயமாக உள்ளது என சிரித்துகொண்டே கூறிவிட்டு, சிங்களத்திலேயே அதற்கு பதில் வழங்கியிருந்தார்.
