
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பசில்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவு செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாகவும், அவசியம் ஏற்படின் தொடர்ந்தும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
