நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் பசில் ராஜபக்ஷ

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சராக பதவியேற்றிருந்த பசில் ராஜபக்,ஷ நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நிதியமைச்சு பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாகவும், நாளை வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனை அறிவிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.