பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் 12 முதல் 15 ரூபா வரை அதிகரிக்குமென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு சீனி பணிசின் விலை ரூ.100 ஆக அதிகரிக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேக்கரி பொருட்களுக்கு வற் (VAT) வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி பிரதமருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேக்கரி தொழிலில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் கொள்வனவு செய்யும் போது வற் (VAT) வரி செலுத்தப்படும்.

பேக்கரி உரிமையாளர்கள் பேக்கரி பொருட்களுக்கு வற் (VAT) வரி செலுத்துவது அநீதியானது.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளால்  8,000 பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.

பேக்கரிகளின் உற்பத்தி மற்றும் விற்பனையும் சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.