விவசாயிகளின் சிறியளவிலான கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை இவ்வாறு தள்ளுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.