மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவித்தல்

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.