லாப்ஸ் எரிவாயு கொள்கலன் 6,000 ரூபாவிற்கு விற்பனை?
லாப்ஸ் (laugfs gas) 12.5kg எரிவாயு சிலிண்டர் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட உள்ளதாக அந் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Laugfs எரிவாயு நிறுவனத்தின் 3,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வரும் கப்பல் இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அடுத்த வாரம் முதல் எரிவாயு விநியோகிக்க அந்நிறுவனம் தயாராவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
