
மின் கட்டணம் அதிகரிப்பு?
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியனாக இருக்கும் அதேவேளை செலவு 750 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
