அனைத்துக் கட்சித் தலைவர்கள் – பிரதமர் இடையில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 நடைபெறவுள்ளது.

அதற்கமைய, அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த வரைவு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்தக் கூட்டத்தில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.