சீனாவிடமிருந்து 500 மில்லியன் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள்

சீனாவிலிருந்து 500 மில்லியன் நிதியுதவியின் கீழ், முதல் தொகுதி மருந்து பொருட்கள் நாளை வெள்ளிக்கிழமை CX3119 விமானத்தில் நாட்டிற்கு வந்து சேரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 10 மில்லியன்  மதிப்புள்ள உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் 256,320 சிரிஞ்சுகள் அதில் உள்ளடங்குகின்றன.

அத்துடன், 256,320 சிரிஞ்சுகளின் இரண்டாவது தொகுதி இம்மாத நடுப்பகுதியில் வரவுள்ளன.

இந்த இரண்டு தொகுதி மருந்துப்பொருட்களும் 6 மாதங்களுக்குப் பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது

முதல் தொகுதியில் 10 மில்லியன் மதிப்புள்ள 512, 640 உயிர்காக்கும் எனோக்ஸாபரின் சோடியம்  (Enoxaparin Sodium Injection) கிடைக்கவுள்ளன.

எனோக்ஸாபரின் சோடியம் என்பது இரத்த உறைவு எதிர்ப்பு மருந்து ஆகும். இது பொதுவாக கர்ப்ப காலத்தில் மற்றும் சில வகையான அறுவை சிகிச்சைகள் உட்பட ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) மற்றும் நுரையீரல் embolism (PE) சிகிச்சை மற்றும் கடுமையான acute coronary syndrome (ACS) மற்றும் மாரடைப்பு அல்லது ஹீமோடையாலிசிஸின் போது பயன்படுத்தப்படுகிறது.