உயர்தர மற்றும் தரம் ஐந்து பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்
கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார்.
முன்னதாக ஒகஸ்ட் மாதத்தில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதாக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
