ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 382,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன..

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கினர்.

அதன்படி, நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக சேவை வழங்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலையை நாடுகின்றமையே, இதற்கான காரணம் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியும் பண்டார தெரிவித்துள்ளார்