மீண்டும் இரவுநேர மின்வெட்டு

இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும்  நாடளாவிய ரீதியில் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று புதன்கிழமையுடன் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும், பகல் வேளையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜூன் 4 ஆம் திகதி சனிக்கிழமை இரவு வேளையில் மட்டும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும், எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜூன் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது, என தெரிவிக்கப்படுகின்றது.