நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் விஷேட கூட்டம் இன்று
நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றியக்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு வேளை தொடர்பிலும் இதன்போது தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
