யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இன்று புதன்கிழமை முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண நூலகத்தில் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, யாழ்.நூலகம் தீயூட்டப்பட்டது.

யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

அதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன

யாழ்ப்பாண நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன

.1981 ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர், 2004ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது.

தற்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் 125,000 நூல்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.