வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வீசும் காற்றின் வேகம் 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும், எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
