கல்முனையில் மண்ணெண்ணெய் பெற மக்கள் நீண்ட வரிசை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அதன்படி, தமது அடிப்படைத்தேவைகளைப் பெறுவதற்கு மக்கள் பல அசௌகரியங்களை தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமைக்கிழமையும் கல்முனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், மக்கள் கொள்கலன்களுடன் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில், அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு தாண்டியும் வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்றுச் சென்றனர்.

smart
smart