உதிரிபாகங்களுக்கான வரியை நீக்கினால் விலை குறையும்

டொலர் பிரச்சினை காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, மிதிவண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டமைப்பு சங்கத்தின் செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மவுன்டைன் (mountain) துவிச்சக்கரவண்டியின் விலை 18 ஆயிரத்தில் இருந்து சுமார் 36 ஆயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான துவிச்சக்கர வண்டி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நீண்ட காலமாக இலங்கையில் அசெம்பிள் செய்யப்படுகின்றது.

துவிச்சக்கரவண்டி உதிரிபாகங்களுக்கான வரியை நீக்கி, பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டால் ஒரு துவிச்சக்கரவண்டி நிச்சயம் சுமார் 19,000 ரூபாய்க்கு கிடைக்கும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.