நாளை முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்

50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்  நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமானதால் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படாமல் இருந்தது.

குறித்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், இன்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.