நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருள் நிலவரம்: அமைச்சர் தகவல்

இலங்கையில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று திங்கட்கிழமை விபரங்களை வெளியிட்டுள்ளார்.

மே 30, 2022 மதியம் 12.10 மணி நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளின் கையிருப்புக்கள் பின்வருமாறு.

டீசல் – 14,433 மெற்றிக்தொன்

சூப்பர் டீசல் – 58 மெற்றிக்தொன்

92 ஆக்டேன் பெட்ரோல் – 41,978 மெற்றிக்தொன்

95 ஆக்டேன் பெட்ரோல் – 14, 041 மெற்றிக்தொன்

ஜெட் ஏ1 – 1, 621 மெற்றிக்தொன்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும் இன்று முதல் இதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான திருத்தப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 03 மாதங்களாக சுத்திகரிப்பு நிலையம் இயங்கவில்லை எனவும் அமைச்சர் விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.