தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 11.30மணியளவில் தலை சிதறிய நிலையில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார்.

அதனை அவதானித்த அவ்விடத்தில் நின்ற மக்கள் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில், குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளமை விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மரணம் கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.