
விமல் வீரவன்ஸ மனைவி மேன்முறையீடு
விமல் வீரவன்ஸ மனைவி சஷி வீரவன்சவுக்கு கடவுச்சீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்து சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார்.
அதற்கமைய, அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை எதிர்வரும் மே 30ஆம் திகதி பரிசீலிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது.
குறித்த பிணை மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுனவலவின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.
போலித் தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 100,000 அபராதத்தையும் விதித்ததுடன், குறித்த தொகையை செலுத்தாவிடின் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது, சஷி வீரவன்சவின் மேன்முறையீடு எதிர்வரும்; 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் அது வரை அவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
