பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெனியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உண்மைக்குப் புறம்பானவை.

சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. அதே நேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுக்களுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.