சிறுநீர் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் பீர்

சிங்கப்பூரில் மதுபான நிறுவனம் ஒன்று ‘Newbrew’ என்ற புதிய பிராண்டை உருவாக்கி சிறுநீர் கழிவில் இருந்து பீர் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்வதற்காகவே இத்தாயாரிப்பை மேற்கொண்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள பீர் ஆனது ‘Newater’ எனப்படும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த நீர் கழிவு மற்றும் சிறுநீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட உயர் தரம் வாய்ந்த நீராகும்.

இந்த ‘Newbrew’ என்ற புதிய பிராண்டில் 95 சதவீத தயாரிப்புகள் இந்த ‘Newater’ நீரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இ

இது சர்வதேச பாதுகாப்பு தரத்துடன் கூடியதாகவும் பீர் தயாரிப்பு ஏற்ப தூய்மையானதாகவும் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பீரில் தேன், பார்லி, மோல்ட், ஈஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேர்க்கப்படுவதாகவும், சிங்கப்பூரில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் இந்த பீர் விற்பனைக்கு வர உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.