
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து கணக்கிடப்படுகின்றது
நாட்டின் கையிருப்பில் உள்ள, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து கணக்கிடப்பட்டு வருவதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள உணவு நெருக்கடிக்கு தயார்படுத்தல் மற்றும் திட்டமிடல் என்பன குறித்து ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும், என சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
