
றோல்ஸ் மற்றும் பட்டிஸ் ஒன்றின் விலை 100 ரூபா
நாட்டில் அனைத்து சிற்றுணவகங்களிலும், சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஆகியவை இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம், என தெரிவிக்கப்படுகின்றது
அதன்படி,
முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் விலை 100 ரூபா
பரோட்டாவின் விலை 50 ரூபா
கறியுடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 150 ரூபா
கறியுடன் 3 பரோட்டாவின் விலை 200 ரூபா
அப்பம் ஒன்றின் விலை 50 ரூபா
முட்டை அப்பத்தின் விலை 100 ரூபா
தேநீரின் விலை 50 ரூபா
பால் தேநீரின் விலை 100 ரூபா
கறியுடன் அரை இறாத்தல் பாணின் விலை 170 ரூபா என அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் றோல்ஸ், பட்டிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பனிஸ் மற்றும் சீனி சம்பல் பனிஸ் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக 65 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரிவோரின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
