ஜூன் முதல் கோழி இறைச்சி ஏற்றுமதியை நிறுத்த திட்டம்
கோழி இறைச்சி ஏற்றுமதியை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நிறுத்துவதாக மலேசியா அறிவித்துள்ளது. மலேஷியாவில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மலேஷியா மாதாந்தம் 3.6 மில்லியன் கோழிகளை ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில் உள்நாட்டு விலை மற்றும் உற்பத்தி ஸ்திரம் அடையும் வரை வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுவத்துவதாக மலேஷியா அறிவித்துள்ளது.
மலேஷியாவில் கோழி இறைச்சியின் விலை அண்மைய மாதங்களில் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் இறைச்சி வாங்குவதில் விற்பனையாளர்கள் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
