தேங்கி கிடக்கும் சாரதி அனுமதி பத்திர விண்ணப்பங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  ஸ்மார்ட் அட்டைகளுக்கு 6 இலட்சம் யூரோக்கள் செலுத்த வேண்டும்.

எனினும் இலங்கை மத்திய வங்கியிடம் இந்த தொகையை செலுத்துவதற்கான பணம் இல்லாத நிலை காணப்படுகின்றது..

இந்நிலையில், தற்பொழுது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகவும், சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.