இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

இன்நு புதன்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகவே, சமையல் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை 3500 மெற்றிக்தொன் LP Gas கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.

அதன் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் எனவும், இரண்டு கப்பல்களுக்கான டொலர் வழங்கப்பட்டுள்ளது எனவும், லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.