
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ, தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் கையளித்துள்ளார்.
புதிதாக குறித்த அமைச்சுப் பதவிக்கு கடந்த மே 20ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு, புதிய தலைவர் உள்ளிட்ட சபையை நியமிக்கும் வகையில் தாம் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
குறித்த பதவியில் 30 மாதங்களாக (2 1/2 வருடங்கள்) பதவி வகித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாம் இக்காலப் பகுதியில் தமக்குரித்தான சம்பளத்தையோ, வாகனத்தையோ பெறவில்லையென தெரிவித்துள்ள அவர், தமது வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்குமிட தேவைகளுக்கான செலவுகளை தமது சொந்த செலவில் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தாம் நாட்டுக்காக உதவ முன்வந்த இக்காலப் பகுதியில், வரி செலுத்துபவர்களின் பணத்தில் எந்தவகையிலும் பயன்பெறவில்லையென என சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டுக்கு அவசியமாகவுள்ள இச்சந்தர்ப்பத்தில் ஏனையோரும் இந்நடைமுறையை பின்பற்ற ஊக்குவிப்பது சிறந்தது கிமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
அது மாத்திரதமன்றி தாம் குறித்த காலப் பகுதியில் மேற்கொண்ட சேவைகள் தொடர்பிலும் தனது இராஜினாமா கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
