
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
காலி முகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரியே, இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்நிலையில், மே 09 தாக்குதலுக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய கோரியும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
