தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக கடலோரப் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 3 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்துகளே நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது, போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 375 லீட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கடத்தலுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.