வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருள் மீட்பு
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட குஷ் என்ற சட்டவிரோத போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி 258 மில்லியன் ரூபாவாகும்.
போதைப்பொருள் குறித்து இலங்கை தபால் வெளிநாட்டு பொதிகள் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது.
கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 03 பொதிகளில் இருந்தே இவ்வாறு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
